PulseNews
தமிழகம்

இங்க போனாலே உங்க இதயம் கையில வந்துவிடும்... காலடி வச்சா எமன் கூடவே வருவார்; உலகையே ஆட்டிப் படைக்கும் இடங்கள்

சாகசச் சுற்றுலா என்பது இப்போது வெறும் கடற்கரைகள் மற்றும் மலைப் பிரதேசங்களுடன் முடிந்துவிடுவதில்லை. உலகம் முழுவதும் உள்ள பயணிகள் தீவிரமான வெப்பநிலை, ஆபத்தான நிலப்பரப்புகள், நச்சுச் சூழல் மற்றும் கடுமையான வாழ்வியல் சவால்கள் நிறைந்த இடங்களை நோக்கி அதிகளவில் ஈர்க்கப்படுகிறார்கள். பல ஆபத்துகள் நிறைந்திருந்தாலும், இந்த இடங்கள் தங்களின் தனித்துவமான அனுபவங்களுக்காகவும் இயற்கை அதிசயங்களுக்காகவும் மக்களைத் தொடர்ந்து வசீகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ரூ.67 லட்சம் சம்பளம், கோடீஸ்வரன்னு சொன்னாங்க... ஆனா ஆஸ்திரேலியாவில் இது எல்லாம் பத்தாது; குமுறும் இந்தியர் டெத் வேலி, அமெரிக்கா (Death Valley) பூமியில் இதுவரை பதிவான மிக அதிக வெப்பநிலைகளில் சில டெத் வேலியில் பதிவாகியுள்ளன. இங்கு கோடைகால வெப்பநிலை பெரும்பாலும் 50 டிகிரி செல்சியஸை கடக்கிறது. வறண்ட பாலைவனச் சூழல், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கொளுத்தும் வெயில் ஆகியவை இங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதை மிகக் கடினமாக்குகின்றன. இருப்பினும், அங்குள்ள உப்புப் படிவுகள் (Salt flats), பிரமிக்க வைக்கும் பாலைவன நிலப்பரப்புகள், வண்ணமயமான பள்ளத்தாக்குகள் மற்றும் இரவு நேர விண்மீன் பார்க்கும் வாய்ப்புகளுக்காகச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர். குளிர்காலமும் ஆரம்ப வசந்த காலமும் இந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்க பாதுகாப்பான காலமாகக் கருதப்படுகின்றன. டானகில் டிப்ரஷன், எத்தியோப்பியா (Danakil Depression) உலகிலேயே மிகவும் வெப்பமான மற்றும் நிலவியல் ரீதியாக மிகவும் தீவிரமாக இயங்கக்கூடிய இடங்களில் ஒன்று டானகில் டிப்ரஷன். இந்தப் பகுதியில் அமிலத் தன்மையுடைய வெந்நீர் ஊற்றுகள், நச்சு வாயுக்கள், உப்புச் சமவெளிகள் மற்றும் வேற்றுகிரகம் போல கட்சியளிக்கும் வண்ணமயமான வெப்பமண்டல புலங்கள் உள்ளன. கடுமையான வெப்பம் மற்றும் ஆபத்தான எரிமலை செயல்பாடுகள் இருந்தபோதிலும், பூமியில் வேறு எங்கும் பார்க்க முடியாத அரிதான நிலவியல் அமைப்புகளையும் வேற்றுகிரக காட்சிகளையும் காண பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். அண்டார்டிகா பூமியின் மிகவும் குளிர்ந்த, வறண்ட மற்றும் பலத்த காற்று வீசும் கண்டம் அண்டார்டிகா ஆகும். இங்கு வெப்பநிலை கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் கடுமையாகக் குறையும். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இதன் சூழல் உயிர்வாழ்வதற்குப் பெரும் சவாலாக அமைகிறது. இருப்பினும், பிரம்மாண்டமான பனிப்பாறைகள், பனிப்பொழிவு மண்டலங்கள், பென்குயின் காலனிகள், திமிங்கலங்கள் மற்றும் மனிதர் கால் படாத துருவ நிலப்பரப்புகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் அங்கு பயணம் செய்கிறார்கள். சாகசப் பயணக் கப்பல்கள் மூலமாக அண்டார்டிகா இன்று சாகசப் பயணிகளின் முக்கியக் கனவுத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. எவரெஸ்ட் சிகரம், நேபாளம் பனிச்சரிவுகள், கடுமையான உயரம், ஆக்சிஜன் குறைபாடு மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக உலகின் மிக ஆபத்தான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும், உலக சாதனைகளுக்காகவும், சாகசத்திற்காகவும், உலகின் உயரமான சிகரத்தைக் கைப்பற்றினோம் என்ற பெருமைக்காகவும் உலகம் முழுவதிலுமிருந்து மலையேறுபவர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைய தொடர்ந்து முயன்று வருகின்றனர். பாம்புத் தீவு, பிரேசில் (Snake Island) அதிகாரப்பூர்வமாக 'இல்ஹா டா கியூமாடா கிராண்டே' (Ilha da Queimada Grande) என்று அழைக்கப்படும் இந்த பாம்பு தீவு, உலகின் மிக வீரியமிக்க விஷம் கொண்ட ஆயிரக்கணக்கான 'கோல்டன் லான்ஸ்ஹெட்' (Golden lancehead) பாம்புகளின் புகலிடமாகும். இதனால் இது உலகின் மிக ஆபத்தான தீவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குப் பொதுமக்கள் செல்வதற்கு பிரேசில் அரசு கடுமையான தடை விதித்துள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இங்க போனாலே உங்க இதயம் கையில வந்துவிடும்... காலடி வச்சா எமன் கூடவே வருவார்; உலகையே ஆட்டிப் படைக்கும் இடங்கள்
PulseNews சுருக்கம்

சாகசப் பயணங்களை விரும்புவோர் தற்போது கடற்கரைகளைத் தாண்டி, கடும் வெப்பநிலை, நச்சுச் சூழல் மற்றும் சவாலான நிலப்பரப்புகளைக் கொண்ட ஆபத்தான இடங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். அபாயங்கள் நிறைந்திருந்தாலும், அங்குள்ள இயற்கை அதிசயங்களும் தனித்துவமான அனுபவங்களுமே சுற்றுலாப் பயணிகளைத் தொடர்ந்து அங்கு ஈர்க்கின்றன.

அமெரிக்காவின் டெத் வேலி மிக அதிக வெப்பத்திற்கும், எத்தியோப்பியாவின் டானகில் டிப்ரஷன் அமில வெந்நீர் ஊற்றுகள் மற்றும் நச்சு வாயுக்களுக்கும் பெயர் பெற்றவை. அண்டார்டிகாவின் அதீத குளிர், எவரெஸ்ட் சிகரத்தின் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் பிரேசிலின் பாம்பு தீவில் உள்ள வீரியமிக்க விஷப் பாம்புகள் என அனைத்தும் பெரும் சவால்களைக் கொண்டவை. இத்தகைய இடங்கள் ஆபத்தானவை என்பதை அறிந்தும், சாகச ஆர்வலர்கள் அவற்றைக் காணத் தவறவில்லை.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu