ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய கார்
அதிவேகமாக வந்த கார் மோதியதில், சென்னை ஆளுநர் மாளிகை சுற்றுச் சுவரின் குறிப்பிட்ட பகுதி இடிந்தது. நள்ளிரவில் சைதாப்பேட்டையில் இருந்து அதிவேகமாக வந்த கார், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை தாண்டிச் சென்று ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவர் மீது மோதியது. காரில் இருந்த பெண் உள்பட 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்து ஏற்பட்ட போது அவர்கள் மதுபோதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சிகிச்சைக்குப் பின் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. சைதாப்பேட்டையில் இருந்து நள்ளிரவில் அதிவேகமாக வந்த அந்த கார், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைத் தாண்டிச் சென்று சுவரின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மது போதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.