SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!

State Bank of India New Cash Withdrawal Rules from October 1: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கி கிளைகள் வழியாக பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண நடைமுறையை வெளியிட்டுள்ளது. வங்கி கிளைகள் மூலம் நேரடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கோள்வதைக் குறைத்து, டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை கட்டணங்கள் வரவிருக்கும் அக்டோபர் 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன.

பண பரிவர்த்தனை வரம்பு மற்றும் புதிய கட்டண விவரங்கள்

வங்கிக் கிளைகள் (Branch Channel) மூலமாக தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி டெபாசிட் (BSBD) கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண மாற்றம் பொருந்தும். ஒரு மாதத்தில் முதல் 4 முறை வங்கி கிளைகள் மூலம் நேரடியாக பணம் எடுக்கும் சேவைகள் முற்றிலும் இலவசமாகவே தொடரும். எனினும், ஒரு மாதத்திற்குள் 4 முறைக்கும் அதிகமாக நேரடியாக பணம் எடுக்கும் பட்சத்தில், அதற்கு அடுத்தபடியாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி (GST) கட்டணமாக வசூலிக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முற்றிலும் விலக்கு

அதேவேளையில், வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்லாமல் மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ (UPI) போன்ற அனைத்து வகையான டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்வித புதிய கட்டுப்பாடுகளோ அல்லது கூடுதல் கட்டணங்களோ விதிக்கப்படவில்லை. அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவொரு வரம்பும் இன்றி முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் கிளைகளுக்கு நேரில் சென்று பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிகளையும், நடைமுறைகளையும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் வங்கி கிளையில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள், அதற்குரிய கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்.
வங்கி கிளைகளுக்கு நேரில் சென்று பணப் பரிவர்த்தனை செய்வதைக் குறைத்து, வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறைக்கு ஊக்குவிக்கும் நோக்கில் இந்த புதிய கட்டண முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.