PulseNews
தமிழகம்

டன் கணக்கில் மிதந்த மீண்கள்; கொதித்தெழுந்த மீனவர்கள்!

சென்னை அருகே என்னூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆற்றை நம்பி நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்டை குப்பம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருந்து வருகிறது. ஆனால் இன்று யாரும் எதிர்பாராத விதமாக மடவை, கிழங்கான், விரால் உள்ளிட்ட டன் கணக்கான மீன்கள் ஆற்றில் செத்து மிதந்து கிடந்துள்ளது. இந்த ஆற்று அருகே ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதனால் அதில் இருந்து ரசாயண கழிவு வெளியேறியதன் காரணமாக இந்த மீன்கள் இறந்துள்ளதாக மீன்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த இறந்து கிடக்கும் மீன்களால் அப்பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதியில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் ஆர்பாட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் உடனடியாக இறந்து கிடக்கும் மீன்களை அகற்ற கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் இங்கு வந்து பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டன் கணக்கில் மிதந்த மீண்கள்; கொதித்தெழுந்த மீனவர்கள்!
PulseNews சுருக்கம்

சென்னை அருகே உள்ள எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடவை, கிழங்கான் மற்றும் விரால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில் ஆற்றில் மிதந்து கிடக்கின்றன.

நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர் குப்பம் மற்றும் சிவன்டை குப்பம் ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இந்த ஆற்றையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். ஆற்றின் அருகே அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகளே இந்த மீன் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu