மின் விநியோகப் பெட்டியின் மேற்பரப்பில் கசியும் மின்சாரம்.
சென்னை போரூர் காரம்பாக்கத்தில், பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள மின் விநியோகப் பெட்டியின் மேற்பரப்பில் மின்சாரம் கசிந்து வருவதாகவும் அசம்பாவிதம் நிகழும் முன்பு அதனை சரி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அறியாமல் அதன் மீது கை வைத்த சிலர் மின் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் மழைக்காலம் நெருங்குவதால் உடனடியாக பழுதை சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலையின் மின் விநியோகப் பெட்டியில் மின்சாரம் கசிந்து வருகிறது. இதனை அறியாமல் தொட்ட சிலர் மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு இப்பழுதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலம் நெருங்கி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வாரியம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.