தொகுதி மறுவரையறை விவகாரம் - முதலமைச்சர் விஜய் அழைத்த எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக, தேமுதிக..!
தொகுதி மறுவரையறை விவகாரம் - எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்த ஏற்பாடு எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்தது திமுக.. தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ள எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்தது திமுக. த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி அறிவிப்பு. தொகுதி மறுவரையறையில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதால் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை. முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ள எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பது குறித்து துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி விளக்கம். டெல்லி வருவதற்கு நீங்கள் தயாரா? - கனிமொழி கேள்வி மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும். மத்திய ஜல் சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா? கனிமொழி கேள்வி எல்.கே.சுதீஷ் பங்கேற்க மாட்டார் - தேமுதிக அறிவிப்பு தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான தமிழக எம்பிக்கள் கூட்டம் தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷ் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு. தொகுதி மறுவரையறை மசோதாவில் ஒருமித்த குரலை எழுப்புவதற்காக தமிழக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு விஜய் அழைப்பு. தமிழக எம்.பி.க்கள் கூட்டம் தொடர்பான முதலமைச்சர் விஜயின் அழைப்பை நிராகரித்த அதிமுக, திமுக, தேமுதிக. தாம் டெல்லியில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தகவல். எம்.பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கிறது அதிமுக.. முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கிறது அதிமுக. தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பங்கேற்க வேண்டாம் என முடிவு.

தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்த, முதலமைச்சர் விஜய் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஒருமித்த கருத்தை உருவாக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த கூட்டத்தை திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது ஒரு அரசியல் நாடகம் என விமர்சித்துள்ள திமுக, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தீர்மானத்தை வழங்க முன்வருவார்களா என கேள்வி எழுப்பியுள்ளது. அதேபோல், டெல்லியில் இருப்பதால் பங்கேற்க இயலாது என தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ள நிலையில், தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டதால் அதிமுகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.