RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு

RB Udhaykumar: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

ஆர்.பி. உதயகுமாரின் அநாகரீக பேச்சு

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று பேசினார். அப்போது, “ தமிழ்நாட்டில் காவிரி பற்றி பேசுவதே பிரச்னையாக உள்ளது. காவிரி தண்ணீருக்காக சண்டை போடுவார்கள் என பார்த்தால், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எங்கள் அண்ணி த்ரிஷாவிற்காக சண்டை போடுகிறார்கள். ஆளுங்கட்சியாக இருப்பவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் காவிரி தண்ணீருக்காக சண்டை போட்டு, கொண்டு வாருங்கள் என சொன்னால் காவிரி தண்ணியாவது அதாவது..

செல்வி.ஜெயலலிதா என்கிற மாபெரும் பெண் தலைவரின் கீழ் அரசியல் பாடம் பயின்றவரா நீங்கள்? அசிங்கமாக இல்லையா இப்படி போகிற இடமெல்லாம் இன்னொரு பெண்ணை பற்றி மேடையில் பேச? இதுதான் உங்கள் பெண் தலைவரான செல்வி.ஜெயலலிதா அவர்கள் உங்களுக்கு கற்றுக் கொடுத்தாரா? #AIADMK #TVKVijay @rbudhayakumar_ pic.twitter.com/97ctOb19rh
— Harish M (@chnmharish) August 9, 2026

எங்க அண்ணி த்ரிஷா பற்றி யார் பேசியது? இரவோடு இரவாக தூக்கி சென்றுவிட்டனர். சட்டசபைக்கு வந்து கலகலவென இருக்க வேண்டாமா? எத்தனை ஆண்டு காலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக சேவை செய்து உழைத்து இருந்தாலும், எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பினை மக்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்க வேண்டாமா? எதையோ பறிகொடுத்ததை போன்று உட்கார்ந்து இருக்கிறார் (முதலமைச்சர் விஜய்). அப்போது சுற்றி இருந்தவர்கள் மூனுஷா என கூற, எங்க அண்ணணுக்கு தெரிந்தது எல்லாம் த்ரிஷா மட்டும் தான்” என ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

மலிவான அரசியல் - சாடும் நெட்டிசன்கள்

ஆர்.பி. உதயகுமாரின் அநாகரீகமான பேச்சு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சி துணை தலைவர் என பல முக்கிய பதவிகளை வகித்தும் பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என இவருக்கு தெரியவில்லை. உங்களது அரசியல் லாபத்திற்காகவும், கூடியிருக்கும் கூட்டத்திடம் இருந்து கைத்தட்டலை பெறவும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசலாமா? தனிநபர்களின் உரிமை மற்றும் வாழ்க்கையை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்படி அநாகரீகமாக பேசியதன் விளைவாக தான் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டார். ஆனாலும், திருந்தாமல் பொதுவெளியில் இப்படி பேசுவது என்பது சற்றும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இதுபோன்ற நபர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

ஆற்றாமையின் வெளிப்பாடு

ஆர்.பி. உதயகுமாரின் பேச்சை தவெகவினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகளில், “திமுகவை விட்டால் மக்களுக்கு அதிமுக தான் ஒரே வாய்ப்பு. இதனால் எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற அவர்களின் கனவு விஜயால் கலைந்துவிட்டது. அதோடு, அவர்கள் திமுகவுடனே கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றதால், 6 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். ஏராளமான நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி தவெகவிற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் அதிமுக உள்ளது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமலேயே, முதலமைச்சர் மீது ஆர்.பி. உதயகுமார் சேற்றை வாரி இறைத்து வருகிறார்” என தவெகவினர் பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. காவிரி விவகாரத்தை விட்டுவிட்டு, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நடிகை த்ரிஷாவிற்காக சண்டையிடுவதாகவும், முதலமைச்சர் விஜய்க்கு த்ரிஷாவை மட்டுமே தெரியும் என்றும் அவர் பேசியுள்ளார்.
ஆர்.பி. உதயகுமாரின் இந்தப் பேச்சு அநாகரீகமானது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் லாபத்திற்காகப் பொதுவெளியில் தனிநபர் குறித்துத் தரம் தாழ்ந்து பேசுவதை ஏற்க முடியாது என அவர்கள் விமர்சிக்கின்றனர். மேலும், அதிமுகவின் தற்போதைய பலவீனமான நிலையைப் பொறுத்துக்கொள்ள முடியாமலேயே அவர் இவ்வாறு பேசுகிறார் என தவெக ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.