மகா ஓயாவில் மூழ்கி இளைஞன் பலி! மற்றுமொருவர் மாயம்
மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவமானது, நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகா ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். தீவிர தேடுதல் நடவடிக்கை அதன்போது, அப்பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு இருவரை மீட்டு தம்பதெனிய வைத்த...

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மகா ஓயாவில் நேற்று (15) மாலை குளித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் இன்னும் காணாமல் போயுள்ளார்.
உள்ளூர் மக்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்கள் மீட்கப்பட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.