ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலி*யல் தொ*ல்லை : வடமாநில வாலிபர் கைது!
பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயது பெண் ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து திருவனந்தபுரத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் மீண்டும் பணிக்குப் புறப்பட்டார். அதன்படி முன்பதிவு இருக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயில் ஈரோடு - சேலம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவ்ரவ் குமார் (வயது 29), அந்தப் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சமயத்தில் தூக்கத்தில் இருந்த பெண் திடுக்கிட்டு எழுந்து கத்தி கூச்சலிட்டார். இதனால் சக பயணிகள் விழித்துக் கொண்டு அந்த நபரைச் சூழ்ந்து கொண்டனர். அதன் பின்னர் இது குறித்து ஈரோடு ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு போலீசார் விரைந்து சென்று சவ்ரவ் குமாரை விசாரணைக்காக ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணைக்குப் பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சவ்ரவ் குமார் நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரத்திலிருந்து மைசூர் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், பெங்களூரு ஐடி நிறுவன ஊழியரான 23 வயது இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண், ரயிலின் முன்பதிவு பெட்டியில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானார்.
ரயில் ஈரோடு மற்றும் சேலம் இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே பெட்டியில் பயணம் செய்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவ்ரவ் குமார் (29) என்பவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்த வடமாநில வாலிபரை கைது செய்துள்ளனர்.