Chennai News Live Updates: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக நீடிப்பு
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 7 மாவட்டங்களில் மழை: செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 107.77 ரூபாய்க்கும், டீசல் 99.55 ரூபாய்க்கும், சி.என்.ஜி ஒரு கிலோ 97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாகத் தொடர்ந்து நீடிக்கிறது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.