கோட்சே ஆர்.எஸ்.எஸ் காரர் தான்; சாவர்க்கரின் பேரன் அதிரடி வாக்குமூலம்
மராட்டிய மாநிலம், புனேவில் நடைபெற்று வரும் வழக்கில் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்ளு பேரன் சத்யாகி அளித்துள்ள வாக்கு மூலம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2023 மார்ச் மாதம் லண்டனில் உரையாற்றிய போது, வி.டி. சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்காக, சத்யாகி அவர் மீது அவதூறு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில், கடந்த தங்கள் கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது, எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்குப் பதிலளித்த சத்யகி, "என் தாத்தா கோபால் கோட்சே மற்றும் நாதுராம் கோட்சே ஆகியோர் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தீவிர உறுப்பினர்களாக இருந்தனர் என்பது உண்மைதான்" என்று தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் பொதுவெளியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், மராட்டிய மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ”காந்தி படுகொலைக்குப் பிறகு கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறிவருகிறது. தற்போது சாவர்க்கரின் பேரன் கூறியுள்ள தகவலால், மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ் தான் பதிலளிக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் தான் என்று விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யாகி ஒப்புக்கொண்டுள்ளார். புனேவில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கில், எதிர்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் பேசிய கருத்துக்கு எதிராக சத்யாகி தொடர்ந்த வழக்கில், இந்த வாக்குமூலம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோபால் கோட்சே தனது தாத்தா என்று குறிப்பிட்ட சத்யாகி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள் கோட்சேவுடன் தொடர்பில் இருந்ததையும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.