PulseNews
தமிழகம்

பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தல்: விழுப்புரத்தில் 150 சாக்லேட்டுகளுடன் இருவர் கைது

பீகாரில் இருந்து விற்பனைக்காக கஞ்சா சாக்லேட் எடுத்து வந்த பீகாரைச் சேர்ந்த இருவரை விழுப்புரம் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 150 சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிறுத்தத்தில் காவல் ஆய்வாளர் நேவிஸ் அந்தோணி ரோஸி, உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதுச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரு நபர்களைப் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் மகாராஜ் கஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மண்டல் ரிஷி என்பவரின் மகன் தனஞ்ஜெய்குமார் (27) மற்றும் மகாராஜ் ரிஷி என்பவரின் மகன் ராஜாகுமார் (26) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அந்த இருவரிடமிருந்தும் தலா 5 கிராம் அளவில் இருந்த 150 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பீகாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தல்: விழுப்புரத்தில் 150 சாக்லேட்டுகளுடன் இருவர் கைது
PulseNews சுருக்கம்

பீகாரிலிருந்து விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளுடன், பீகாரைச் சேர்ந்த தனஞ்ஜெய்குமார் மற்றும் ராஜாகுமார் ஆகிய இருவரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இவர்களைப் பிடித்து சோதனை செய்ததில், இவர்களிடம் 150 கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பீகார் மாநிலம், பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து தலா 5 கிராம் எடையுள்ள 150 சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu