” கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!
VCK Ulundurpet Conference: உளுந்தூர்பேட்டை வீசிக மாநாட்டில் உயிரச்சம் ஏற்படும் அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், கரூர் சம்பவம் போல் அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காகவே தனது உரையை 3 நிமிடங்களில் முடித்துக் கொண்டதாக தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பெண்கள், முதியோர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில், மக்கள் நெரிசல் காரணமாக உயிருக்கு ஆபத்தான சூழல் உருவானது. கரூர் சம்பவம் போல எவ்வித அசம்பாவிதமும் நிகழக்கூடாது என்பதற்காக, தனது உரையை மூன்று நிமிடங்களிலேயே தொல். திருமாவளவன் முடித்துக் கொண்டார்.
மாநாட்டிற்கு வந்திருந்த பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை முன்னிட்டே இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்தச் சூழலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அவர் அவசரமாக உரையை நிறைவு செய்துள்ளார்.