PulseNews
தமிழகம்

போதை மற்றும் விபத்தில்லா விழுப்புரம்! - களமிறங்கிய கலெக்டர்... அதிகாரிகளுக்குப் பறந்த கறார் உத்தரவு!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (24.08.2026) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், சாலை விபத்துகள் ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

கடந்த சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பணிகளில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் சாலை விபத்துக்களை குறைத்திட உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் தற்பொழுது வரை நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும், விபத்துக்கான காரணங்கள் குறித்தும், அப்பகுதிகளில் விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சாலைகளிலும் வேகத்தடை (Speed Breaker) தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து சாலைகளிலும், தகவல் பலகை (Sign Boards), வாகன நிறுத்திட பலகை (Parking Boards) தேவையான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். சந்திப்பு சாலைகளில் (Junction Point) மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் (Highmas light) அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திசைகாட்டும் பலகைகளை 50 மீட்டருக்கு முன்னரே நிறுவுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பொறுத்தவரை அவ்வபோது ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் தொடர் கண்காணிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சணைகள் ஏற்படா வண்ணம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அறிவுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும், தொடர் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகைள் மேற்கொள்ளவது குறித்தும், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதோடு, போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் தொடர் சோதனைகளை மேற்கொள்ளவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், காவல்துறை, உணவுபாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டாக ஆய்வு செய்திடவும், விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதுடன், போதைப்பொருள் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ., உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீ ரஷத் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
போதை மற்றும் விபத்தில்லா விழுப்புரம்! - களமிறங்கிய கலெக்டர்... அதிகாரிகளுக்குப் பறந்த கறார் உத்தரவு!
PulseNews சுருக்கம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாராந்திர ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (24.08.2026) நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத மற்றும் விபத்தில்லா மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுப்பதற்காகப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூட்டத்தில் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu