PulseNews
தமிழகம்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி... தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பிரசவ வலியுடன் 108 ஆம்புலன்சில் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு நடுவழியிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்தது.

அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி, மருத்துவ ஆலோசனையுடன் முதலுதவி நுட்புநர் பிரசவம் பார்த்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்கடை ரகீம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிகானாபர்வீன் (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தாயார் சிகானாபர்வீனை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, குழந்தையின் கழுத்தைச் சுற்றி நஞ்சுக்கொடி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மேல் சிகிச்சைக்காக உடனடியாக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து கண்டியூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிகானாபர்வீன் தஞ்சாவூர் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்சில் முதலுதவி நுட்புநர் தெட்சிணாமூர்த்தி மற்றும் டிரைவர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் பரபரப்பு

ஆம்புலன்ஸ் கரந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது சிகானாபர்வீனுக்கு பிரசவ வலி திடீரென அதிகரித்தது. சிறிது நேரத்தில் பனிக்குடமும் உடைந்ததால், ஆம்புலன்சிலேயே பிரசவம் ஏற்படும் சூழல் உருவானது.

நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக வாகனத்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினர். பின்னர் 108 மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்தின் ஆலோசனையின்படி, முதலுதவி நுட்புநர் தெட்சிணாமூர்த்தி தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொண்டு, ஆம்புலன்சிலேயே சிகானாபர்வீனுக்கு பிரசவம் பார்த்தார்.

அப்போது சிகானாபர்வீனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதை உறுதி செய்த பின்னர், ஆம்புலன்ஸ் உடனடியாக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு புறப்பட்டது. அங்கு தாயும், சேயும் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் செயல்பட்டு, மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி ஆம்புலன்சிலேயே பாதுகாப்பாக பிரசவம் பார்த்த 108 ஊழியர்களை சிகானாபர்வீனின் உறவினர்கள் பாராட்டினர். மேலும், இக்கட்டான நேரத்தில் துரிதமாக உதவியதற்காக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

2 நாட்களுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம்

இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவையாறு அருகே நாகத்தி பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், கண்டியூரில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அங்கு பணியில் இருந்த முதலுதவி நுட்புநர் தெட்சிணாமூர்த்தி மற்றும் டிரைவர் மார்சிலின் ஆகியோர் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான முதலுதவி அளித்தனர். பின்னர் இருவரையும் அருகில் உள்ள நாகத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள இந்த இரு சம்பவங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசர நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தாயும், குழந்தையும் பாதுகாப்பாக மருத்துவமனை சென்றடைய உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி... தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
PulseNews சுருக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பிரசவ வலியால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயணத்தின்போது வலி அதிகரித்ததால், ஆம்புலன்ஸை சாலையோரத்தில் நிறுத்தி மருத்துவ ஆலோசனையுடன் முதலுதவி தொழில்நுட்புநர் பிரசவம் பார்த்தார்.

இதன் மூலம் அந்தப் பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு தாயும் சேயும் பாதுகாப்பாக தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu