முதல் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்
இந்தியாவிலேயே எரிசக்தி மேலாண்மைக்கான ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்ற முதல் துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் உருவெடுத்துள்ளது. 2025 - 26 நிதியாண்டில், இந்தத் துறைமுகத்தின் மொத்த மின்சார தேவையில் 93.89 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்துள்ளது. எரிசக்தியை முறையாக நிர்வகித்தல், திறம்பட பயன்படுத்துதல், எரிசக்தி சேமிப்பு மற்றும் எரிசக்தி செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்துதல் ஆகியவற்றில் துறைமுகம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு அங்கீகாரமாக தற்போது ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே எரிசக்தி மேலாண்மைக்காக ஐ.எஸ்.ஓ (ISO) சான்றிதழ் பெற்ற முதல் துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்துள்ளது. எரிசக்தியைத் திட்டமிட்டு நிர்வகித்தல், சிக்கனமான பயன்பாடு மற்றும் எரிசக்தி செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்காக இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில், இத்துறைமுகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 93.89 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகவே இந்தத் துறைமுகம் பூர்த்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.