PulseNews
தமிழகம்

விமானத்தில் தூங்கிய கேப்டன்; ஏர் இந்தியா சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தமாக 137 பேர் பயணம் செய்துக் கொண்டிருந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென 300 அடி கீழே இறங்கியது. இதனால், விமானத்தில் ஏற்பட்ட பயங்கர அதிர்வின் காரணமாக 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த விமானம் டெல்லியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு விமானிகளுக்கு மனோவியல் பரிசோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக விமானத்தின் கேப்டன் முதன்மை விமானிக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ‘எதிர்மறையற்றது’ (non-negative, அதாவது, மாதிரி மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் முடிவு’ என்று வந்தது. அதனை தொடர்ந்து ஆய்வகப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் கஞ்சா வகை போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய அரசின் விமான விபத்து விசாரணை ஆணையம், இரு விமானிகளிடம் விசாரணை நடத்தியது. அதன்படி நேற்று போதைப் பொருள் பரிசோதனையில் சிக்கிய கேப்டனிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த விசாரணையில், அவர் தூக்கமின்மைப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காகத் தனது குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் விமான விபத்து விசாரணை ஆணையத்திடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளன. புக்கெட்டில் விமானம் தங்கியிருந்த இடைவேளையின்போது அவரால் தூங்க முடியவில்லை என்றும், தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாகச் சில காலமாகவே தூக்கமின்மைப் பிரச்சனை இருந்ததாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விமானப் பயணத்தின்போது 30 முதல் 35 நிமிடங்கள் வரை தூங்கியதாகவும், பின்னர் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு துணை விமானி பின்னால் நின்று விமானத்தின் ஏர் கண்டிஷனிங் (குளிர்சாதன) அமைப்பு குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அந்த உயரத்தில் திடீர் மாற்றம் நிகழ்ந்ததாகவும் கேப்டன் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கேப்டன் எந்த மருந்தை உட்கொண்டார் என்றோ அல்லது எவ்வளவு காலமாக அதை உட்கொண்டு வருகிறார் என்றோ குறிப்பிடவில்லை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளும் விமானிகள், அது குறித்த விவரத்தை தங்கள் விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது DGCA-வின் விதிமுறையாகும். அவ்வாறு தெரிவிக்கத் தவறினால், விமான நிறுவனம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும். இந்த விமானி அவ்வாறு தகவல் தெரிவித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விமானத்தில் தூங்கிய கேப்டன்; ஏர் இந்தியா சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்!
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 4-ம் தேதி தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து 137 பயணிகளுடன் டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 300 அடி கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான அதிர்வின் காரணமாக 17 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விமானம் இறுதியாக டெல்லியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu