சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் காவல்துறையின் விசேட அறிவிப்பு
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்று (19.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகலவால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயம் என்றும், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும்...

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பாதுகாப்புப் பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை எதிர்வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல இது குறித்த அறிவிப்பை இன்று (19.08.2026) ஊடகங்களிடம் வெளியிட்டார். இருக்கைப் பட்டி அணிவது தொடர்பான இந்தச் சட்டம் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.