தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை
வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபரு...

வவுனியா தரணிக்குளம் பகுதியில், தந்தையின் பராமரிப்பில் இருந்த 11 வயது சிறுமி ஒருவரை, அவரது தந்தையின் நண்பரான 36 வயது நபர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். இதற்கமைய, குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.