தந்தை மகன் போராட்டம்; வெளியான ‘டாக்ஸிக்’ படத்தின் டிரெய்லர்!
'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி மும்பை, கர்நாடகா என பல்வேறு இடங்களில் நடந்தது. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு இந்திய மொழிகளிலும் மற்றும் பல்வேறு வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இறுதியாக ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை வெளியிட்ட இப்படத்தின் யஷ் கதாபாத்திர அறிமுக வீடியோ, டீசர் என அனைத்திலுமே அதீத வன்முறை மற்றும் கவர்ச்சி கலந்த காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து நாயகிகளை மட்டும் அறிமுகப்படுத்தும் ‘லேடிஸ் அண்ட் லேடிஸ்’ என்ற முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் மகனுக்கும் தந்தைக்குமான உறவுடன் ஆரம்பிக்க பின்பு கியாரா அத்வானி தான் தாய் என்றும் தாய் - தந்தை இருவருக்கும் சண்டை என்பது போல காட்சிகள் விரிகிறது. பின்பு நயன்தாராவுடனான யஷின் காட்சிகள் வர இந்த சிட்டியை நீ தான் ஆள வேண்டும் என நயன்தாரா ஆசைப்படுகிறார். ஆனால் எதிரிகளின் கையில் யஷ்ஷும் நயன்தாராவும் சிக்க அவர்களின் கடைசி ஆசையை வில்லன் கேட்கும் காட்சிகள் வருகிறது. பின்பு நடிகைகள் ஹூமா குரேஷி, ருக்மினி வசந்த் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற இறுதியாக யஷ்ஷின் மகன் தோற்றம் வந்து அவருக்கும் தந்தை யஷ்ஷுக்கும் நடக்கும் போராட்டத்தை மைய்யமாக வைத்து பயங்கர ஆக்ஷன் காட்சிகளுடன் டிரெய்லர் முடிகிறது.

‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் நடிப்பில், கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி மற்றும் ருக்மினி வசந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம், ஆகஸ்ட் 26 அன்று பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகிறது. கோவா, மும்பை மற்றும் கர்நாடகாவில் படமாக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம், ஆரம்பம் முதலே வன்முறை மற்றும் கவர்ச்சி நிறைந்த காட்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது.
வெளியான டிரெய்லர், தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான மோதலை மையமாக வைத்து விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ளது. இதில் தாய்-தந்தை இடையிலான சண்டை, நயன்தாராவின் ஆசை, வில்லனிடம் சிக்கும் காட்சிகள் எனப் பல்வேறு திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக யஷின் மகன் அறிமுகமாகி, அவருக்கும் யஷ்ஷுக்கும் இடையிலான போராட்டத்தோடு டிரெய்லர் நிறைவு பெறுகிறது.