அமெரிக்காவின் 5 பெரிய ஏரிகளை விட பெருசு... பாலைவனத்துக்கு அடியில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட கடலா?
இன்று உலகின் மிகப்பெரிய பாலைவனமாக விளங்கும் சகாராவில், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் 5 பெரிய ஏரிகளையும் விட பிரம்மாண்டமான 'மெகா-சாட்' (Mega-Chad) என்ற ஏரி அமைந்திருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 3,61,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்த இந்த ஏரி, காலநிலை மாற்றத்தால் சுருங்கி, இன்று சாட், நைஜர், நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளால் பகிர்ந்துகொள்ளப்படும் 'சாட் ஏரி' (Lake Chad) என்ற சிறிய அமைப்பாக மாறியுள்ளது. பிறந்த குழந்தையாக இருந்தாலும் நேரில் வரணும்... அமெரிக்க விசா அப்ளை பண்றவங்களுக்கு வந்த அதிரடி உத்தரவு 'ஆப்பிரிக்க ஈரப்பதக் காலம்' (African Humid Period) 'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' இதழில் வெளியான ஆய்வில், 'ஒளி மூலம் தூண்டப்பட்ட ஒளிர்தல் டேட்டிங்' (Optically Stimulated Luminescence Dating) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஏரியின் வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர். சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த ஏரி, 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தனது உச்சக்கட்டப் பரப்பளவான 3,61,000 சதுர கிலோ மீட்டரை அடைந்தது. பூமியின் சுழற்சி மாற்றங்களால் ஏற்பட்ட ஆப்பிரிக்கப் பருவமழையால், அப்போதைய வட ஆப்பிரிக்கா ஏரிகள், ஆறுகள் மற்றும் அடர்ந்த தாவரங்களுடன் பசுமையாகக் காட்சியளித்தது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு மற்றும் ஏரியின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்தது. 90% அழிந்த நவீன சாட் ஏரி பழங்கால 'மெகா- சாட்' ஏரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் வற்றியது. ஆனால், மனிதர்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தற்போதைய பருவநிலை மாற்றத்தால் நவீன 'சாட் ஏரி' வெறும் சில தசாப்தங்களிலேயே அழிவின் விளிம்பிற்குச் சென்றுள்ளது. 1963-ல் 26,000 சதுர கிலோமீட்டராக இருந்த சாட் ஏரி, தற்சமயம் 1,500 சதுர கிலோமீட்டருக்கும் கீழ், அதாவது 90% குறைந்து சுருங்கிவிட்டது. 4 கோடி மக்களின் வாழ்வாதாரம்: விவசாயம், மீன்பிடித்தல் போன்ற தொழில்களுக்காக இந்த ஏரியை நம்பி இருக்கும் 4 கோடி மக்களின் வாழ்வாதாரம் தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய பாலைவனமான சகாராவில் 'மெகா-சாட்' என்ற பிரம்மாண்டமான ஏரி இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஏரி வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளின் மொத்த பரப்பளவை விடவும் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த ஏரியின் பரப்பு சுருங்கி, தற்போது சாட், நைஜர், நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய 'சாட் ஏரியாக' மாறியுள்ளது. சுமார் 3,61,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த மெகா-சாட் ஏரி திகழ்ந்திருந்தது.