மணிப்பூர்: பெட்ரோல் பங்க் மீது கையெறி குண்டு வீச்சு
மணிப்பூர் பெட்ரோல் பங்க் குண்டு வீச்சு: தொபால் மாவட்டம் கான்கொபாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது அடையாளம் தெரியாத நபர் கையெறி குண்டு வீசி தப்பினார், உயிர் சேதம் ஏதுமின்றி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். Manipur petrol pump attack: Unknown assailant hurls grenade at Thoubal district Kangkopak fuel station and flees, no injuries reported as police launch intensive probe.

மணிப்பூரின் தௌபால் மாவட்டம், கான்கொபாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையெறி குண்டு வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.