PulseNews
தமிழகம்

வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி

சென்னை வெள்ளத்தை தடுப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கை ரகசிய ஆவணமா? தமிழ்நாடு அரசு 41 மாதங்களாக ஒளித்து வைத்திருப்பது ஏன் என பாமக கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை வெள்ளத்தை தடுப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை 41 மாதங்களாக வெளியிடாதது ஏன்? என முனைவர் சௌமியா அன்புமணி இன்று (17.08.2026) சட்டமன்றத்தில் வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அந்த அறிக்கை குறித்து பத்திரிகை செய்திதான் வந்தது, தவெக அரசுக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர்குழுவின் அறிக்கை முன்னாள் முதல்வரிடம் கொடுக்கப்பட்டது; அது குறித்து இப்போதைய அரசுக்கு எதுவும் தெரியாது என்று சொல்வது ஒரு வெட்கக் கேடான, மோசமான பதில்!

பின்னணி

சென்னை வெள்ளத்தை தடுப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கை ரகசிய ஆவணமா? தமிழ்நாடு அரசு 41 மாதங்களாக ஒளித்து வைத்திருப்பது ஏன்?

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாத வெள்ளத்தை தொடர்ந்து முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான 14 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் 600 பக்க இறுதி அறிக்கை 2023 மார்ச் மாதம் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. 2023 டிசம்பர் மாத வெள்ளத்தை தொடர்ந்து இந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் ஊடகச் செய்திகள் கூறின. ஆனால், இதுவரை திருப்புகழ் குழு அறிக்கை வெளியிடப்படவில்லை.

தமிழ்நாடு அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்?

மீண்டும் வட கிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், 41 மாதங்களாக திருப்புகழ் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்?

திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்.

இந்தக் கேள்விகளை பாமக சட்டமன்றக் குழு தலைவர் சௌமியா அன்புமணி சட்டமன்றத்தில் எழுப்பினார். ஒரு நியாயமான, மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசாக இருந்தால் – அந்த அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். குதர்க்கமாக பதில் சொல்வது நல்லாட்சிக்கு அழகல்ல.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
PulseNews சுருக்கம்

சென்னையில் மழைக்கால வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் அறிக்கையை, கடந்த 41 மாதங்களாக தமிழ்நாடு அரசு ஏன் வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளது என்று பாமக கேள்வி எழுப்பியுள்ளது. இது போன்ற முக்கிய ஆவணங்களை ரகசியமாக வைத்திருப்பது வெட்கக்கேடான மற்றும் மோசமான செயல் என அக்கட்சி விமர்சித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இன்று (17.08.2026) சட்டமன்றத்தில் முனைவர் சௌமியா அன்புமணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அந்த அறிக்கை தொடர்பாக செய்தித்தாள்களில் மட்டுமே செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu