PulseNews
தமிழகம்

பணியின் போது காவலர் உயிரி*ழப்பு : ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கல்!

சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் வாத்திய இசைக்குழு காவலராக தர்மராஜ் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15ஆம் தேதி (15.08.2026) அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு பணியின் போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (18.08.2026) ஆயுதப்படையின் கூடுதல் காவல்துறை இயக்குநர், தினகரன், மறைந்த காவலர் தர்மராஜின் மனைவி ராணிமங்களவள்ளி, மகன் அனவரதபெருமாள் மற்றும் மகள் சுப்புலட்சுமி ஆகியோரை நேரில் சந்தித்து ரூ. 30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின்போது, ஆவடி த.சி.கா. படைப்பயிற்சி மைய தளவாய் எஸ். விஜயகுமார் உடனிருந்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பணியின் போது காவலர் உயிரி*ழப்பு : ரூ. 30 லட்சம் நிவாரணம் வழங்கல்!
PulseNews சுருக்கம்

சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் வாத்திய இசைக்குழுவில் தர்மராஜ் காவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பின் போது, அவர் திடீரென மயங்கி விழுந்ததால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காவலர் தர்மராஜின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ரூ. 30 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu