அமைச்சர் தொகுதியில் அடுத்தடுத்து குவியல் குவியலாகப் பிடிக்கப்படும் போதைப் பொருட்கள்!
வடமாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து படகுகள் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் அதிகமான கடத்தல்கள் பிிடிபட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வெற்றி பெற்ற அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 200 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி சிலரை கைது செய்துள்ளனர். அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெக பிரமுகர் பதுக்கி வைத்திருந்த 24 கிலோ குட்கா, நாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 41 கிலோ குட்கா, நேற்று இரவு அறந்தாங்கியில் 133 கிலோ குட்கா என சுமார் 200 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அறந்தாங்கியில் தொடர்ந்து குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவது பரபரப்பாக உள்ளது.

வட மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், கிழக்கு கடற்கரை வழியாகப் படகுகள் மூலம் இலங்கைக்குக் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவிலான கடத்தல்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வெற்றி பெற்ற அறந்தாங்கி தொகுதியில், கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 200 கிலோ குட்கா பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாகச் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.