ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் பரவலான தொடர் கனமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, செந்நிறமாக மாறி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வழக்கமாக வெண்ணிறமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சி, தற்போது மழை வெள்ளம் காரணமாக செந்நிறமாக மாறி, மிகுந்த சீற்றத்துடன் கீழ்நோக்கி பாய்கிறது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக வெண்மையாகவும் அமைதியாகவும் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி, தற்போது செந்நிறமாக மாறி மிகுந்த சீற்றத்துடன் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை நீடிப்பதால் நீர்வீழ்ச்சி பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.