PulseNews
தமிழகம்

விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!

விருதுநகர் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, 7,11,405 பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.08.2026) குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர், "தேசிய குடற்புழு நீக்க நாள்" முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் "தேசிய குடற்புழு நீக்க நாள்" இன்று(10.08.2026) அனுசரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5,78,289 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் என மொத்தம் 7,11,405 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமானது 292 கிராம சுகாதார செவிலியர்கள், 1504 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3280 பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இம்முகாமில் 11 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 22 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியகரம் (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) குழுக்களும் மற்றும் 11 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் இம்முகாமில் பார்வையாளராக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.

மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்

மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.08.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மருத்துவ அலுவலர்கள், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
PulseNews சுருக்கம்

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 1 முதல் 19 வயது வரையிலான 5,78,289 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,33,116 பெண்கள் என மொத்தம் 7,11,405 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும் இம்முகாமில் விடுபட்டவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் குடற்புழுத் தொற்றைத் தவிர்க்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu