PulseNews
தமிழகம்

மக்களே...14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 2026-2027-ஆம் ஆண்டிற்கு மாத உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருடம் ITI தொழில் பழகுநர் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 ITI பிரிவுகளில் (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto Electrician, Electrician, Fitter, Welder, Painter & Turner) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த மணவர்களுக்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு 02.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சிப் பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாநகர் போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மக்களே...14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
PulseNews சுருக்கம்

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான ஐடிஐ (ITI) தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் 14,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் ஒரு வருட காலத்திற்கு இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu