PulseNews
தமிழகம்

மின்சாரம் பாய்ந்து வி*பத்து : தேர் திருவிழாவில் இருவருக்கு நேர்ந்த சோகம்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நன்னை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலுக்காகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாகச் சிறிய அளவிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்ட தேர்க் கொண்டு வரப்பட்டது. இதற்கான வெள்ளோட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.08.2026) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (14.08.2026) தேர்த் திருவிழா நடைபெற இருந்த நிலையில், நேற்று (13.08.2026) இரவு தேரை தயார் செய்வதற்காகச் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர், கோவிலுக்கு அருகே கொண்டு வரப்பட்டது. அப்போது கோவில் முக்கிய நபர்கள் சிலர் தேரை இழுத்துக் கொண்டு சென்றனர். அச்சமயத்தில், மேலே இருந்த உயர்மின் அழுத்தக் கம்பியில் தேரின் தலைப்பகுதி லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் தேரை இழுத்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். மேலும், ராசு என்பவர் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தார். அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாகக் குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மின்சாரம் பாய்ந்து வி*பத்து : தேர் திருவிழாவில் இருவருக்கு நேர்ந்த சோகம்!
PulseNews சுருக்கம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில், அய்யனார் கோவில் தேர்த்திருவிழாவிற்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தேர் கொண்டுவரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தேரின் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில், இன்று தேர்த்திருவிழா நடைபெற இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நேற்று இரவு நடைபெற்றபோது மின்சாரம் பாய்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu