PulseNews
தமிழகம்

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!

சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A (Long March 7A) விண்கலமே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த விண்கலம் மூலம் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி (Zhongxing-4B / ChinaSat-4B) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு

Ibc Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!
PulseNews சுருக்கம்

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A விண்கலம், விண்ணில் செலுத்தப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விண்கலத்தின் மூலம் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்துவிட்டது.

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu