PulseNews
தமிழகம்

மகனுக்கு மொட்டையடித்த மாதம்பட்டி ரங்கராஜ்; ஜோடி சேர்ந்த ஜாய் கிரிசல்டா

சின்னதிரை நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுடன், தனது குழந்தைக்கு மொட்டையடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா. சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிசல்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்குத் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்றும், அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த வழக்கு விசாரணையில், நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனையில் அக்குழந்தையின் தந்தை ரங்கராஜ் தான் என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த குழந்தையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அந்த குடும்பத்தைத் தான் பராமரிப்பதாகவும் ரங்கராஜ் உறுதியளித்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாய் கிரிசல்டா தனது மகன் ராகாவுக்கு கோயிலில் வைத்து மொட்டையடித்துள்ளார். அப்போது, அந்த குழந்தையை ரங்கராஜின் மடியில் வைத்து மொட்டையடித்த புகைப்படங்கள் மற்றும் கோயிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜாய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரங்கராஜ் பட்டு வேட்டி, சட்டையுடன் ஜாய் கிரிசல்டா மற்றும் ராகாவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மகனுக்கு மொட்டையடித்த மாதம்பட்டி ரங்கராஜ்; ஜோடி சேர்ந்த ஜாய் கிரிசல்டா
PulseNews சுருக்கம்

சின்னத்திரை நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டாவும் இணைந்து தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஜாய் கிரிசல்டாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், ரங்கராஜே அக்குழந்தையின் தந்தை என்றும், தங்களுக்கு திருமணம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையின் முடிவில், அக்குழந்தையின் தந்தை ரங்கராஜ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரும் இணைந்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu