“இன்றைய முதல்வர் விஜய்... வருங்கால பிரதமர்!” -அமைச்சர் ஜெகதீஸ்வரி!
சிவகாசி அருகே ஆமத்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது எனக் கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது “வரும் காலங்களில் வேலை தேடும் எந்தக் காலகட்டத்திலும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலை இருக்கக் கூடாது. கல்வித் தகுதியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை முதல்வர் விஜய் உறுதியாக வழங்குவார். ஊழல் இல்லாத மக்களுக்கான தவெக ஆட்சிக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுத்து வேலை வாங்க வேண்டாம். பணம் கேட்டால் கொடுக்கக் கூடாது. நமது அரசு பணம் கேட்காது. இளைஞர்கள், பெண்கள், மாணவ-மாணவியர்களுக்கு தவெக அரசு முக்கியத்துவம் வழங்கும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஊழல் இல்லாத அரசாக தவெக அரசு செயல்படும். வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் முதல்வர் விஜய் பிரதமர் என்பதை நோக்கியே பயணிப்போம்” என்றார் அமைச்சர் ஜெகதீஸ்வரி.

சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் வேலை தேடும் இளைஞர்கள் யாரிடமும் பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலை இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார். கல்வித் தகுதியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.