“செளமியா அன்புமணியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” - துணை சபாநாயகர் பாராட்டு!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று அறிவுப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று (31-08-26) மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பா.ம.க எம்.எல்.ஏவும் அன்புமணியின் மனைவியுமான செளமியா அன்புமணி மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். நீண்ட நேரம் அவர் பேசியதால், மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக துணை சபாநாயகர் மு. ரவிசங்கர் அவரை இடைமறித்தார். அப்போது செளமியா அன்புமணி, பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது துணை சபாநாயகர் மு.ரவிசங்கர், “வரலாற்று சிறப்புமிக்க இந்த பேரவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இந்த அவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? அந்த 10 நிமிடங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? தன்னுடைய தொகுதி மக்களுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என்பதை செளமியா அன்புமணியிடம் இருந்து நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகள், தேவையில்லாத இடைச்சொறுகள் இதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க 100 சதவீதம் சமூதாய ரீதியாகதான் அவர் பேசுகிறார்” என்று அவரை பாராட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன் மற்றும் வேளாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (31-08-26) நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது பங்கேற்றுப் பேசிய பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் செயல்பாடுகளைப் பாராட்டிய துணை சபாநாயகர், அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.