PulseNews
தமிழகம்

‘ரேசன் அரிசியை பற்றி இப்படி கூறலாமா..?’ - திமுகவின் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் பல்டி!

தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20-08-26) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “கடந்த ஆட்சியில் முழுமையான பாதுகாப்பு அளித்து தூய்மையான அரசியை ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்குகிற அத்தனை பேரும் ஆட்டுக்கும் கோழிக்கும் தான் தீவனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தான் சன்னரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என இந்த தொகையை முதல்வர் உயர்த்தி கொடுத்திருக்கிறார்” என்று கூறினார். ரேசன் அரிசியை ஆடு, மாடு, கோழி போன்றவை தான் சாப்பிடுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “ஏழைகள் சாப்பிடும் ரேசன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவதாக கூறலாமா? ரேசன் அரிசியை சாப்பிடும் ஏழைகளை அவை முன்னவர் செங்கோட்டையன் கொச்சைப் படுத்தலாமா? எதிர்கட்சியாக இருந்த போது ரேசன் அரிசியை பற்றி செங்கோட்டையன் பேசியுள்ளாரா? திமுக ஆட்சியின் ரேசன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டி உள்ளனர்” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, “ரேசன் அரிசி சாப்பிடுவதை நான் ஒன்றும் கொச்சைப்படுத்தவில்லை. சில நேரங்களில் தரமில்லாத அரிசி நமக்கு வரும் போது அதை பயன்படுத்திய கிராம மக்கள் சிலர் அரிசி சாப்பிட ஏதுவாக இல்லை என்று சொல்லிய சில கருத்துக்கள் எங்களுக்கு கிடைத்தது. இதுபோன்ற நிலை இருக்க கூடாது என்ற நோக்கத்தில் கூறினேன்” என விளக்கம் அளித்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘ரேசன் அரிசியை பற்றி இப்படி கூறலாமா..?’ - திமுகவின் எதிர்ப்பால் அமைச்சர் செங்கோட்டையன் பல்டி!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறைகள் குறித்த விவாதத்தின் போது, அமைச்சர் செங்கோட்டையன் ரேசன் அரிசி தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்துகளுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தனது கருத்தை அமைச்சர் செங்கோட்டையன் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu