Chennai News Live Updates: கைவிரல் ரேகை பதிவு - தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரே சீரான நிலையில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இயற்கை எரிவாயுவான ஒரு கிலோ சிஎன்ஜி (CNG) ரூ.97.00 என்ற விலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் சர்க்கரை விலை 19.44% குறைவு முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டதால் தமிழ்நாட் டில் வரலாறு காணாத அளவுக்கு சர்க்கரை விலையேற்றம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 24-ந் தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.72-க்கு விற்பனையானது. கடந்த 25-ந் தேதி 9.7% விலை குறைந்து கிலோ ரூ.65-க்கு விற்ப னையாகி வந்த சர்க்கரை விலை நேற்று மேலும் குறைந்து கிலோ ரூ.58-க்கு விற்பனையானது. அதன்படி 50 கிலோ எடை கொண்ட ஒரு மூடை சர்க்கரை நேற்று ரூ.2,900-க்கு விற்பனையானது.இது, கடந்த 24-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து 19.44% குறைந்துள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கும், டீசல் ரூ.99.55க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97.00க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. முறையற்ற பருவமழையால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சர்க்கரை விலை 19.44 சதவீதம் குறைந்துள்ளது.