மகளிர் ஆசியக் கோப்பை: நடுவரிடம் வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீராங்கனைக்கு அபராதம்
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் போது, கள நடுவரின் முடிவை எதிர்த்து விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குல் பெரோசா மீத…

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் போது, கள நடுவரின் முடிவை எதிர்த்து விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குல் பெரோசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் இந்த செயலுக்காக, குல் பெரோசாவின் போட்டி ஊதியத்தில் 10 சதவீதத்தை அபராதமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐசிசி விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டதற்காக இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளையாட்டுத் தொடர் நடந்து வரும் சூழலில், வீரங்கனை ஒருவர் இத்தகைய சிக்கலில் சிக்கியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.