துலீப் கோப்பை இறுதிப்போட்டி: சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தென் மண்டலம் - கிழக்கு மண்டலம் மோதல்
இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையின் 2026-27 சீசன் இறுதிப்போட்டி, சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை 5 நாட்கள…

இந்தியாவின் முதன்மையான உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையின் 2026-27 சீசன் இறுதிப்போட்டி, சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ள இந்தப் போட்டியில், கிழக்கு மண்டலம் மற்றும் தென் மண்டல அணிகள் கோப்பையைக் கைப்பற்ற பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டியின் முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் கிழக்கு மண்டல அணி, உணவு இடைவேளையின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி, தேவ்தத் படிக்கல், திலக் வர்மா மற்றும் முகமது சிராஜ் போன்ற முன்னணி வீரர்கள் களமிறங்கியுள்ளதால், இந்தப் போட்டி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.