சென்னையில் இன்று தொடங்குகிறது துலீப் கோப்பை இறுதிப் போட்டி
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் தெற்கு மண்டல அணியும் கிழக்கு மண்டல அணியும் கோப்பையைக் கைப்பற்…
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் தெற்கு மண்டல அணியும் கிழக்கு மண்டல அணியும் கோப்பையைக் கைப்பற்றுவதற்காக நேருக்கு நேர் மோதுகின்றன.
ஏற்கனவே 13 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள தெற்கு மண்டல அணி, இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடரத் துடிக்கும் தெற்கு மண்டல அணிக்கு ஈடுகொடுத்து கிழக்கு மண்டல அணி விளையாட உள்ளது.
இந்த முக்கியப் போட்டியின் முடிவில் எந்த அணி கோப்பையைத் தட்டிச் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.