ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயராக விளையாட விரும்பாத தோனி: வெளிப்படுத்திய சுப்பிரமணியம் பத்ரிநாத்
ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் விளையாடுவதற்கு தனக்கு விருப்பமில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்ததாக, அந்த…

ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் விளையாடுவதற்கு தனக்கு விருப்பமில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்ததாக, அந்த அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார். இந்த விதிமுறை தனக்கு உகந்ததாக இல்லை என்று தோனி நேரடியாகத் தன்னிடம் கூறியதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் தோனி எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால், 2027 ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவாரா அல்லது அவரது பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாடினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வியூகம் ரீதியாகப் பெரும் பலமாக அமையும் என்று பத்ரிநாத் கருதுகிறார். இருப்பினும், இம்பாக்ட் வீரராகக் களமிறங்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.