சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள்: புதிய உலக சாதனையை படைத்த ஷஃபாலி வர்மா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 3,000 ரன்களைக் கடந்த அதிவேக வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 3,000 ரன்களைக் கடந்த அதிவேக வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, ஷஃபாலி வர்மா இந்த மைல்கல்லை எட்டினார். பாகிஸ்தானை வீழ்த்திய அந்த முக்கியமான வெற்றியில், அவரது சிறப்பான ஆட்டமும் ரன் குவிப்பும் பெரும் பங்களிப்பை வழங்கின.
ஒட்டுமொத்தமாக 114 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஷஃபாலி வர்மா, மிக இளம் வயதிலேயே இமாலய சாதனையை எட்டி கிரிக்கெட் உலகில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளார்.
#sports#editorial