PulseNews
விளையாட்டு

கிர்கிஸ்தானில் தொடங்கியுள்ள 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்..!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் அரங்கில் நடைபெற்ற 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகளின் ((World Nomad Games)) பிரமாண்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 113 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் அடங்கிய 87 பேர் குழுவினர் விழா மேடையில் அணிவகுத்து சென்றபோது பிரதமர் மோடி எழுந்து நின்று கை அசைத்து உற்சாகப்படுத்தினார். இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களில் விளையாட்டு போட்டிகளில் 73 பேரும், கலாச்சார நிகழ்ச்சிகளில் 10 பேரும் மற்றும் அறிவியல் கண்காட்சியில் 4 பேரும் கலந்து கொள்கின்றனர்.

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கிர்கிஸ்தானில் தொடங்கியுள்ள 6வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்..!
PulseNews சுருக்கம்

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 6-வது உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள் பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில், உலகம் முழுவதும் உள்ள 113 நாடுகளைச் சேர்ந்த 3,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட 87 பேர் கொண்ட குழுவினர் அணிவகுத்துச் சென்றபோது, பிரதமர் மோடி எழுந்து நின்று கை அசைத்து அவர்களுக்கு உற்சாகமளித்தார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports