PulseNews
விளையாட்டு

கோவையில் சர்வதேச கராத்தே பட்டையத் தேர்வு: 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், 'மை கராத்தே' அமைப்பின் 67-வது சர்வதேச அளவிலான கராத்தே பட்டையத் தேர்வுப் போட்டிகள் நடைபெற்றன. இத்தேர்வில் 3 வயது முதல் 30 வயது வரை உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தற்காப்புத் திறமைகளை வெளிப்படுத்தினர். பிரவுன், பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு மற்றும் கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணப் பட்டயங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. சர்வதேச கராத்தே பயிற்சியாளர் சென்ஷாய் தியாகு நாகராஜ் போட்டிகளை முன்னின்று நடத்தி, வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்தார். கட்டா மற்றும் கராத்தே உள்ளிட்ட பிரிவுகளில் கருப்புப் பட்டை பெற்ற தலைமைப் பயிற்சியாளர்கள் முன்னிலையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பட்டயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பல்வேறு நிலைகளில் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 25 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கராத்தேவின் மிக உயரிய 'கருப்பு வண்ணப் பட்டயங்கள்' (Black Belt) வழங்கப்பட்டன. குறிப்பாக, மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் கருப்புப் பட்டயங்களைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். நிகழ்வின் நிறைவில் பேசிய தலைமைப் பயிற்சியாளர் தியாகு நாகராஜ், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கராத்தே கலையை மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். குறிப்பாக, பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுக்க அதிகளவில் முன்வருகின்றனர் என்று தெரிவித்தார். செய்தி: பி.ரஹ்மான், கோவை

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவையில் சர்வதேச கராத்தே பட்டையத் தேர்வு: 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அசத்தல்
PulseNews சுருக்கம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 'மை கராத்தே' அமைப்பின் சார்பில் 67-வது சர்வதேச கராத்தே பட்டையத் தேர்வு நடைபெற்றது. இதில் 3 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுத் தங்களின் தற்காப்புக் கலைத் திறன்களை வெளிப்படுத்தினர்.

இந்தத் தேர்வில் மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு, பிரவுன் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணப் பட்டயங்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. சர்வதேச கராத்தே பயிற்சியாளர் சென்ஷாய் தியாகு நாகராஜ் முன்னிலையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports