உலகக் கோப்பை ஆக்கி - 5ம் இடம் பிடித்து அசத்திய இந்திய பெண்கள் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு
பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை சாதனை: 52 ஆண்டுகளுக்கு பிறகு டாப் 5-ல் இடம்பிடித்த இந்திய அணிக்கு ஹாக்கி இந்தியா ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு. Women’s Hockey World Cup milestone: Hockey India announces ₹50 lakh reward as Indian team secures historic top-5 finish after 52 years with 3-1 win over Germany.

பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 5 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளது. ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனைகள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டும் விதமாக, இந்திய அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. இச்சாதனையால் இந்திய ஹாக்கி ரசிகர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.