PulseNews
விளையாட்டு

Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்

Royal Enfield Himalayan 750: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் 750 மோட்டார் சைக்கிள் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனமானது பெரிய ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதிக திறன் கொண்ட அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரிவில் முதன்மையானதாக கொண்டு செல்லும் வகையில், இந்த பெரிய வாகனமானது உருவாக்கப்பட்டு வருகிறது. ஹிமாலயன் 750, புதிய பேரலல்-ட்வின் இன்ஜின், பெரிய பாடிவொர்க் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேசிஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புடன், பல முறை சாலை சோதனைகளின் போது சிக்கியது. இது ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் ஹிமாலயன் 450-க்கு மேலான வரிசையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மோட்டார் சைக்கிளில் வழங்கப்பட உள்ள டாப் 5 அப்க்ரேட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹிமாலயன் 750 - டாப் 5 அம்சங்கள்:

1. புதிய 750சிசி இரட்டை சிலிண்டர் இன்ஜின்:

ஹிமாலயன் 450 மாடலில் உள்ள 452 சிசி சிங்கிள்-சிலிண்டர் யூனிட்டை விட கணிசமான அளவு அதிக இடப்பெயர்ச்சியுடன், ராயல் என்ஃபீல்டின் புதிய 750 சிசி பேரலல்-ட்வின் பவர்டிரெய்ன் ஹிமாலயன் 750-ல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இறுதி வெளியீட்டுத் திறன் சுமார் 55 முதல் 60 bhp வரையிலும், உச்சபட்ச டார்க் 60 முதல் 65 Nm வரையிலும் இருக்கலாம்.

6 ஸ்பீட் கியர்பாக்ஸை ஸ்டாண்டர்டாக கொண்டு ஸ்லிப்பர்/அசிஸ்ட் கிளட்ச்சுடன் ஆற்றலை வழங்கும். பெரிய இன்ஜின், ஹிமாலயன் 750-க்கு நெடுஞ்சாலைகளில், குறிப்பாக சீராகப் பயணிக்கும்போதும் மற்றும் ஓவர்டேக் செய்து செல்லும்போதும், ஒரு குறிப்பிடத்தக்க அனுகூலத்தை அளிக்கும். மேலும், நீண்ட தூரப் பயணங்களுக்கான அதன் மேம்பட்ட திறனாலும், இந்த பிரிவில் முதன்மையானதாக உருவெடுக்கக் கூடும்.

2. மேம்படுத்தப்பட்ட ஹார்ட்வேர்

இதுவரை சாலை பரிசோதனையின் போது சிக்கிய புகைப்படங்களின் அடிப்படையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 750 சிசி பைக்கிற்காக கணிசமாக மாறுபட்ட ஒரு சேஸை உருவாக்கி இருப்பதை அறிய முடிகிறது. முன்பக்கத்தில் ஷோவா அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்க சஸ்பென்ஷனில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை முன்பக்க ப்ரேக் டிஸ்க்குகளும் இடம்பெற்றுள்ளன. பின்பக்க சஸ்பென்ஷனில் ரிமோட் ப்ரீலோட் அட்ஜஸ்டர் காணப்படுகிறது. சில சோதனை மாடல்கள் வார்ப்பு அலாய் வீல்களில் தோன்றியுள்ளன. உற்பத்திக்கு தயாரான நிலையில் உள்ள மாடல்கள் ட்யூப்லெஸ் டயர்களுடன் கூடிய ஸ்போக் வீல்களை கொண்டுள்ளன. இது, உற்பத்தி மாடல் வரும்போது வெவ்வேறு வீல் கட்டமைப்புகள் இடம்பெறுவதற்கான சாத்தியத்தை உணர்த்துகின்றன.

3. பன்முகத்தன்மையில் ஹிமாலயன் 750

ஹிமாலயன் 450 மற்றும் ஹிமாலயன் 750 ஆகிய இரண்டு வேரியன்ட்களுக்கும் இடையிலான மற்றொரு முக்கிய வேறுபாடு வீல் அளவுகள் ஆகும். 750 மாடலானது, ஒரு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளிடம் எதிர்பார்க்கப்படும் விகிதாச்சாரங்களைத் தக்கவைத்துக்கொண்டு, தார் சாலைகளில் ஓட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 19-இன்ச் முன்பக்க மற்றும் 17-இன்ச் பின்பக்க வீல் அமைப்பில் காணப்படுகிறது. அதேசமயம், 21-இன்ச் முன்பக்க வயர்-ஸ்போக் வீல் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். சோதனை செய்யப்பட்ட பைக்குகளில் பெரிய எரிபொருள் டேங்க், உயரமான விண்ட்சீல்ட், அகலமான இருக்கை, சென்டர் ஸ்டாண்ட், லக்கேஜ் பொருத்தும் இடங்கள் மற்றும் உயரமாக பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்: 7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ

4. கூடுதல் மின்னணு உபகரணங்கள்:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது முதன்மை மாடலான ஹிமாலயனுக்காக மிகவும் நவீனமான எலெக்ட்ரானிக்ஸ் தொகுப்பையும் உருவாக்கி வருகிறது. சோதனை மோட்டார் சைக்கிள்களில் வட்ட வடிவ TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் காணப்பட்டுள்ளதுடன், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நேவிகேஷன் ஆகிய வசதிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்த பைக்குகளில் க்ரூஸ் கண்ட்ரோலும் காணப்பட்டுள்ளது. மேலும் ரைட்-பை-வயர் த்ராட்டில், தேர்ந்தெடுக்கக்கூடிய ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம். ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் மாற்றக்கூடிய பின்புற ஏபிஎஸ் போன்ற எலெக்ட்ரானிக் அசிஸ்ட்களும் இதில் கிடைக்கும்.

5. ஈஐசிஎம்ஏ 2026 அறிமுகம்:

ஹிமாலயன் 750, உள்நாட்டு சந்தைக்கு வருவதற்கு முன்பாக, இத்தாலியில் நடைபெற உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ராண்டின் விற்பனை எண்ணிக்கையில் பெரிய ஹிமாலயன் மாடல் உள்நாட்டிலும் உலக அளவிலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதால், இதன் விலை வரம்பு ரூ. 4 லட்சம் முதல் 4.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு வரும்போது உள்நாட்டு சந்தையில் ஹோண்டா XL750 ட்ரான்சால்ப் மற்றும் சுசூகி V-ஸ்ட்ரோம் 800DE போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
PulseNews சுருக்கம்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது ஹிமாலயன் 750 மோட்டார் சைக்கிளை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிக திறன் கொண்ட அட்வென்ச்சர் ரக பைக்குகளின் பிரிவில், முதன்மையான மாடலாக இதனை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய ஹிமாலயன் 750 பைக், பேரலல்-ட்வின் இன்ஜின் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த வாகனம் குறித்த கூடுதல் தகவல்கள், அதன் ஐந்து சிறப்பம்சங்கள், அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports