PulseNews
விளையாட்டு

ஒரு பறவையின் விலை இத்தனை கோடியா?; கண்காட்சியில் ஆச்சரியம்

அபுதாபியில், கடந்த ஆகஸ்ட் 28 தேதி முதல் ’சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி-2026’ நடைபெற்று வருகிறது. அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வேட்டை மற்றும் குதிரையேற்றம் தொடர்பான சாதனங்கள் தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளன. அதே போல, பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் இந்த கண்காட்சியில் ஏலத்தில் விடப்படுகின்றன. நடப்பு ஆண்டில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான 55 முன்னணி பால்கன் பறவை பண்ணைகள் பங்கேற்றுள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ’கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்’ ரக வெள்ளை பால்கன் பறவை கிட்டதட்ட ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விறுவிறுப்பான ஏலத்தில் மிக அதிக விலைக்கு இந்த அரியவகை பறவை விற்பனையாகியுள்ளது. வெள்ளை நிறத்தில் ஒரு கிலோ எடையும் 16.5 அங்குலம் நீளமும் கொண்ட இந்த கம்பீரமான பறவை அதன் தோற்றத்தினால் பறவை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த பறவை மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, உலக அளவில் பெரும் ஆச்சரியத்தையும், கவனத்தையும் பெற்றுள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரு பறவையின் விலை இத்தனை கோடியா?; கண்காட்சியில் ஆச்சரியம்
PulseNews சுருக்கம்

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தின் சார்பில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் ‘சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி-2026’ நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் அமீரக பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டை மற்றும் குதிரையேற்ற உபகரணங்களை காட்சிப்படுத்தியுள்ளன.

இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. இதில் ஒரு பறவையின் அதிகப்படியான விலை பல கோடிகளை எட்டியிருப்பது பார்வையாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports