PulseNews
விளையாட்டு

54 ஆயிரம் முதலீடு.. வெறும் 45 நாளில் ஒரு லட்சம்.! சதுரங்க வேட்டையில் சிக்கிய மக்கள்.? நடந்தது என்ன.?

பண ஆசை - ஏமாறும் மக்கள்

சீக்கிரமாகவே பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாகும், இதையே மூலதனமாக வைத்து ஏமாற்றும் கும்பலும் சுற்றி வருகிறது. பல இடங்களில் மோசடி தொடர்பாக தகவல்கள் வெளியானாலும் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து வருகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது FQL,AG,MAINS APP மூலம் பல கோடியை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மோசடி நடந்த்து எப்படி என்பது தற்போது பார்க்கலாம். மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

45 நாளில் ஒரு லட்சம் ரூபாய்

FQL எனப்படும் செயலி மூலம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். அந்த வகையில், FQL செயலியில் ரூ.54,000 முதலீடு செய்தால் 45 நாள்களில் பணம் இரட்டிப்பாகி ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றியுள்ள நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ரெட்டியபட்டி,வத்திபட்டி விளாம்பட்டி,என். புதுக்கோட்டை ,பட்டனம்பட்டி, மூங்கில்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் சிறிது சிறிதாக முதலீடு செய்துள்ளனர்.

முதலீடு செய்தவர்களுக்கு அமெரிக்க டாலர் கணக்கில் பணம் கிடைத்து வந்ததாகவும், அதை அவர்கள் திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, மேலும் பலர் புதிதாக செயலியில் இணைந்து முதலீடு செய்துள்ளனர். இதனிடையே FQL செயலியில் முதலீடு செய்தவர்கள் சங்கிலி தொடர் போல இணைந்துள்ளனர். ஒருவர் தங்களுக்கு கீழ் உள்ள 5 பேரை இணைத்தால் மட்டுமே ஒரு லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி தங்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் இணைத்துள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பணத்தை சுருட்டிக்கொண்ட கும்பல் எஸ்கேப் ஆகியுள்ளது.

FQL நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

இந்த நிலையில் தான், கடந்த இரண்டு நாள்களாக செயலியில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால், முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் FQL நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி இதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து தற்போது கலைந்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக லாபம், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவரையும் விடாதீங்க- வேல்முருகன்

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாக கண்டறிய வேண்டும். மேலூர் FQL மோசடி தொடர்பாக உண்மையான இழப்புத் தொகை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மோசடியில் ஈடுபட்டவர்களின் முழு வலையமைப்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
54 ஆயிரம் முதலீடு.. வெறும் 45 நாளில் ஒரு லட்சம்.! சதுரங்க வேட்டையில் சிக்கிய மக்கள்.? நடந்தது என்ன.?
PulseNews சுருக்கம்

குறைந்த காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் கட்டயம்பட்டியில் செயல்பட்டு வந்த FQL, AG, MAINS ஆகிய செயலிகள் மூலம் முதலீடு செய்த பலரது பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

54 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் 45 நாட்களில் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என ஆசை காட்டி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி பல கோடி ரூபாயை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports