ICC Ranking: 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே களம்.. ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட மானவ் சுதார்!
ICC Bowlers Test Ranking: காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், மானவ் சுதார் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுதார் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தரவரிசையிலும் அவருக்குப் பயனளித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் மானவ் சுதார் முன்னேற்றம் கண்டுள்ளார். வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற போதிலும், அவரது சிறப்பான ஆட்டம் தரவரிசையில் எதிரொலித்துள்ளது.
காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், மானவ் சுதார் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.