சில்லென மாறும் சென்னை.. ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu weather today: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப சென்னையில் வானிலை சில்லென மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.