தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் – 3வது மாநில அளவிலான போட்டி
சென்னை, 23.08.2026: தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய வீரக்கலையான சிலம்பக்கலையை இளம் தலைமுறையினரிடையே வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடைபெற்ற 3வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2026–27 சிறப்பாக நடைபெற்றது. சென்னை மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்ப வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர்...
தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டுப் பேரவை சார்பில் 3-வது மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் 2026–27 ஆம் ஆண்டிற்காக நடத்தப்பட்டன. சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
தமிழகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த சிலம்ப வீரர் மற்றும் வீராங்கனைகள், இந்தப் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியானது பாரம்பரியக் கலையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.