மயிலாப்பூர் மாநகராட்சி பள்ளியில் 2 பிக்கிள்பால் கோர்ட்டுகள்..பிரவீன் சக்ரவர்த்தி எடுத்த அதிரடி முயற்சி?
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தியின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மயிலாப்பூர் சிருங்கேரி மடம் சாலை சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2 புதிய பிக்கிள்பால் மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன. நவீன விளையாட்டுகளை அரசு பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் என பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில், இரண்டு புதிய பிக்கிள்பால் மைதானங்களை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தியின் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களிடையே நவீன விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார். இதன் மூலம் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.